Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சத்தான.. தரை பசலைக்கீரை கடையல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Tharai Pasalai Keerai Kadayal Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ கீரைகளை வாங்கி சமைத்து ருசித்திருப்பீர்கள். ஆனால் தரைப் பசலைக்கீரையை செய்து சாப்பிட்டிருக்கீங்களா? இந்த கீரை பார்க்க மற்ற கீரைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்த கீரையை சிறு பசலைக்கீரை என்றும் அழைப்பர். இந்த கீரையை சமைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
அதே சமயம் இந்த வகை பசலைக்கீரையானது ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது. அதுவும் இந்த கீரையை பருப்பு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளி சேர்த்தும் சமைக்கலாம். எப்படி சமைத்தாலும் ருசி பிரமாதமாக இருக்கும். அதுவும் இந்த கீரையை கடைந்து, சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு இந்த தரை பசலைக்கீரை கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தரை பசலைக்கீரை கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தரை பசலைக்கீரை/ சிறு பசலைக்கீரை - 1 கட்டு
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் தரை பசலைக்கீரையை நீரில் நன்கு கழுவி குக்கரில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கீரையுடன் 10 சின்ன வெங்காயம், நறுக்கிய 2 தக்காளி, 2
பச்சை மிளகாய், 10 பல் பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 சிறிய எலுமிச்சை அளவு புளி, சிறிய கட்டி பெருங்காயம்
சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து அதை குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வேக வைத்த கீரையை போட்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, லேசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது
நீரை ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான தரை பசலைக்கீரை கடையல் தயார்.



Click it and Unblock the Notifications











