Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
பத்தே நிமிடத்தில் ருசியான எள்ளு சட்னி செய்வது எப்படி?
தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் இன்று எள்ளு சட்னி செய்யுங்கள். இது இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்று புலம்புவோர் அதிகம். இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதற்கு என்ன சட்னி செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி செய்து அலுத்துவிட்டதா?

அப்படியானால் இன்று எள்ளு சட்னி செய்யுங்கள். இது இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். நீங்கள் வேலைக்கு செல்பவரானால், காலையில் இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு எள்ளு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பற்கள்
* இஞ்சி - 1 இன்ச்
* வரமிளகாய் - 5-7
* புளி - 1 சிறிய துண்டு
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு விதைகளைப் போட்டு 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், புளி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், ருசியான எள்ளு சட்னி தயார்.
Image Courtesy: swapnaskitchen



Click it and Unblock the Notifications
