Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
Saravana Bhavan Ven Pongal Recipe in Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை று வெண்பொங்கல் செய்யுங்கள். வெண் பொங்கல் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது நெய் மணக்க சரவணபவன் ஹோட்டலில் பரிமாறப்படும் வெண் பொங்கல்தான். இந்த சுவையான வெண் பொங்கலை நீங்கள் வீட்டிலேயும் செய்யலாம்.

இந்த சரவணபவன் ஸ்டைல் வெண்பொங்கல் வாயில் வைத்ததும் நழுவி உள்ளே செல்வது போன்று இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் வெண்பொங்கலை செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்தால் பொங்கல் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சரவணபவன் ஸ்டைல் வெண் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவணபவன் ஸ்டைல் வெண் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- பால் - 1 கப் (காய்ச்சி ஆற வைத்தது)
- தண்ணீர் - 3 கப்
- நெய் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - 1 கொத்து
தாளிக்க:
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 2 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
- அதை குக்கரில் சேர்த்து தண்ணீர், பால், நெய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 அல்லது 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி நன்றாக மசித்து குக்கரை முடி வைக்கவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விடவும்.
- பின் கடுகு, மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் மிளகு, உளுந்தம் பருப்பு மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி வேக வைத்த பொங்கலுடன் சேர்த்து குக்கரை மூடி 5 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- பின் குக்கரை திறந்து நன்றாக கிளறினால் சுவையான சரவணபவன் வெண் பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
