Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
உடல் எடை குறைய சாமை பொங்கலை இந்த பக்குவத்துல செஞ்சு சாப்பிடுங்க.. சுவையானதும் சத்தானதும் கூட..
Saamai Pongal Recipe In Tamil: நீங்கள் டயட்டில் இருக்கீங்களா? அதற்காக காலையில் ஓட்ஸ், சிறுதானியங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவீர்களா? அதுவும் சிறு தானியங்களை எடுத்துக் கொண்டால், கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சிறுதானியங்களுள் ஒன்றான சாமை அரிசியை செய்வதாக இருந்தால், அதைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.
இப்படி பொங்கல் செய்யும் போது, அது சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி, சத்தானதாகவும் இருக்கும். முக்கியமாக சாமை பொங்கலை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும். சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சாமை பொங்கல் சாப்பிட ஏற்றது. இப்படிப்பட்ட பொங்கலை குழந்தைகளும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு சாமை பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாமை பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாமை அரிசி - 1 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
* தண்ணீர் - 5 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* முந்திரி - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரில் சாமை அரிசியை போட்டு, அத்துடன் 1/2 கப்
பாசிப்பருப்பை சேர்த்து, நீரில் 3 முறை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட
வேண்டும்.
* பின் அதில் 5 டம்ளர் நீரை ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு,
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து
கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரை திறந்து, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி நன்கு
சூடானதும், அதில் சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, 10
முந்திரி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வைத்து நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* இறுதியாக தாளித்த பொருட்கள் அனைத்தையும் குக்கரில் உள்ள பொங்கலுடன்
சேர்த்து கலந்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 1 நிமிடம் நன்கு
கிளறி விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான சாமை பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
