Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தள்ளுவண்டி கலக்கல் கார சட்னி ரெசிபி... இட்லி, தோசைக்கு செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்...!
Rottukadai Kara Chutney Recipe in Tamil: என்ன தான் வீட்டில் பார்த்து பார்த்து சுவையாக செய்தாலும் செய்ய முயற்சித்தாலும் ஹோட்டல்களில் சாப்பிடும் உணவின் அதே சுவை கிடைப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் மனக்குறையாக தான் இருக்கிறது. அதே போல் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தாலும், ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவிற்கு என்று தனி இடம் உண்டு எப்போதும். அந்த வகையில் நாம் ரகம் ரகமாய் வீட்டில் சட்டினி செய்தாலும், ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்டினி சுவை சில நேரத்தில் நாவிலேயே இருக்கும்.
நாமும் ஏதேதோ பொருட்களை எல்லாம் சேர்த்து அதே சுவையை கொண்டு வர முயற்சிப்போம். ஆனால் வேறு சுவை கிடைக்குமே தவிர அதே சுவை கிடைக்காது. அப்படி அவங்க என்ன தான் ரகசியமா சேர்ப்பாங்க என யோசிப்போம். அது அவ்வளோ பெரிய ரகசியம் இல்லைங்க. ரோட்டுக்கடை சட்டினியின் சுவை மாறாமல் எப்படி வீட்டில் செய்து அசத்துவது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- தக்காளி - 2
- வரமிளகாய் - 10
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- இஞ்சி - ஒரு துண்டு(ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியின் மேற்பகுதியை நீக்கி விடவும்.
- அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- வரமிளகாயின் காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- புளியை லேசாக தண்ணீரில் அலசி ஓடு அல்லது நார் போன்ற பகுதி இருந்தால் நீக்கி உலர வைக்கவும்.
- மிக்ஸி ஜாரில் உரித்து வைத்த பூண்டு, மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். பின் நறுக்கிய தக்காளி மற்றும் புளியை சேர்க்கவும்.
- அதனுடன் வரமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதுமானதாக இருக்கும் என்பதால் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பின் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கடைசியாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான ரோட்டுக்கடை கார சட்னி தயார்!



Click it and Unblock the Notifications
