Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இட்லி, தோசைக்கு... தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை காரச்சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
Rottu Kadai Kara Chutney In Tamil: காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய உங்கள் வீட்டில் தேங்காய் எதுவும் இல்லையா? அப்படியானால் கவலைப்படாதீர்கள்.
தேங்காய் சேர்க்காமலேயே அட்டகாசமான சுவையில் தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னியை செய்யலாம். இந்த காரச்சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 7
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 1 1/2 கப் அல்லது 150 கிராம்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், பூண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும்
புளி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், உப்பு
மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒருமுறை
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,
கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து
தாளித்து, அதில் அரைத்த சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தேங்காய் சேர்க்காத
ரோட்டுக்கடை கார சட்னி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
