Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Rose Day 2024: ரோஜாப்பூவை வெச்சு சூப்பரா அல்வா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Rose Day 2024 Special Rose Halwa Recipe In Tamil: காதலர் வாரம் தொடங்கவுள்ளது. இந்த காதலர் வாரத்தின் முதல் நாள் தான் ரோஸ் டே என்னும் ரோஜா தினம். இந்நாளில் காதலர்கள் தங்கள் துணைக்கு ரோஜாப்பூக்களை பரிசளிப்பார்கள்.
உங்கள் காதலருக்கு ரோஜாப்பூ மிகவும் பிடிக்குமானால், இந்நாளில் அவருக்கு ரோஜாப்பூவை பரிசளிப்பதுடன், ரோஜாப்பூ கொண்டு ஒரு சூப்பரான ஸ்வீட் செய்து கொடுத்து அசத்துங்கள். அதுவும் ரோஜாப்பூ அல்வாவை செய்து கொடுங்கள். உங்கள் காதலர் ஸ்வீட் பிரியர் என்றால், நிச்சயம் இந்த ரோஜாப்பூ அல்வாவும் அவருக்கு பிடிக்கும்.

உங்களுக்கு ரோஜாப்பூ அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோஜாப்பூ அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு நிற ரோஜாப்பூ இதழ்கள் - 1 கப்
* ரோஸ் வாட்டர் - 1/2 கப்
* ரோஸ் எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
செய்முறை:
* முதலில் ரோஸ் வாட்டரில் ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு, நன்கு
மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* ரோஜாப்பூ இதழ்கள் மென்மையானதும், அதில் தேன், சர்க்கரை, நெய் ஊற்றி
கிளறி, கலவையானது அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் ஏலக்காய் தூள், ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி,
இறக்கி விட வேண்டும்.
* இறுதியாக சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பைப் போட்டு பொன்னிறமாக
வறுத்து இறக்கி, அதை அல்வாவுடன் சேர்த்து கிளறினால், சுவையான ரோஜாப்பூ
அல்வா தயார்.
Image Courtesy: southindianrecipes



Click it and Unblock the Notifications











