Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
1 கப் பச்சரிசியும், 1 கப் அவலும் இருந்தா இப்படி பன் தோசை செஞ்சு சாப்பிடுங்க.. சுவை வேற லெவல்-ல இருக்கும்..
Rice Bun Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி டிபன் செய்து போரடித்துவிட்டதா? இன்று காலை வித்தியாசமான அதே சமயம் சுவையான காலை டிபன் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சரிசியும் அவலும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான காலை டிபனை செய்து கெடுங்கள்.
இந்த காலை டிபன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* அவல் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* எள்ளு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை
ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் அவலை எடுத்து, அதையும் நீரில் ஒருமுறை கழுவிவிட்டு,
நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பச்சரிசி மற்றும் அவலை மிக்சர் ஜாரில் ஒன்றாக
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அந்த மாவில் சில்லி ப்ளேக்ஸ், இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம்,
கேரட் சேர்த்து தோசை மாவை விட ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுபப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், எள்ளு விதைகளை சேர்த்து தாளித்து, பின் அதில் 2 கரண்டி
மாவை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும்.
* பின் அதை சிறிது நேரம் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான அரிசி பன் தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications