Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65
இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டிலேயே சுவையான சிக்கன் 65 செய்து சாப்பிட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்கள்.
நமக்கு என்ன தான் சமையல் தெரிந்தாலும், மற்றவர்கள் சொல்லும் ரெசிபியை முயற்சித்துப் பார்த்து அதன் சுவையை அறிய விரும்புவோம். குறிப்பாக ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு வாங்கி சாப்பிடும் ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்க்க நினைப்போம். குறிப்பாக சிக்கன், மட்டன் ரெசிபிக்களை வீட்டில் செய்ய ஆசைப்படுவோம். இதில் பலரும் ஆர்டர் செய்து சாப்பிடும் ஓர் ரெசிபி தான் சிக்கன் 65.

நம் அனைவருக்கும் சிக்கன் 65 செய்யத் தெரிந்தாலும், ஹோட்டலில் சாப்பிடும் சிக்கன் 65 மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். அது எப்படி தெரியுமா? அதற்கு அவர்கள் சேர்க்கும் மசாலா தான் காரணம். இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டிலேயே சுவையான சிக்கன் 65 செய்து சாப்பிட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 3/4 டீஸ்பூன்
* கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 1
* உப்பு - சுவைக்கேற்ப
பிற பொருட்கள்:
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் சிக்கன் 65 நன்கு மென்மையாக இருக்கும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அதன் மேல் பொரித்த கறிவேப்பிலையைத் தூவினால், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

