Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
1 கப் ரவா இருக்கா? அப்ப 10 நிமிஷத்துல இந்த வடையை செஞ்சு குடுங்க... டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...!
Rava Vada Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே பெரும்பாலான மக்களுக்கு ஏதாவது சூடாக நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தினமும் கடாயில் வாங்குவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும், ஆரோக்கியமற்றதும் கூட. எனவே வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான நொறுக்குத்தீனி செய்வதே புத்திசாலித்தனம்.
பொதுவாக வீட்டில் செய்யக்கூடிய எளிய ஸ்னாக் என்றால் அது வடைதான். ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. உளுந்த வடை சுடுவதற்கு உளுந்தை குறிப்பிட்ட நேரம் ஊற வைக்க வேண்டும். இதைத் தவிர்க்க வேறு சில வடைகளும் உள்ளது. அதுதான் ரவை வடை, இதற்கு எதையும் ஊற வேண்டும், நினைத்த உடனேயே செய்து திருப்தியாக சாப்பிடலாம். இந்த பதிவில் ரவை வடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் ரவை
- அரை கப் தயிர்
- தண்ணீர் தேவையான அளவு
- ¼ கப் நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- 1 கொத்து நறுக்கிய கறிவேப்பிலை
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் சீரகம்
- கால் ஸ்பூன் சமையல் சோடா
- உப்பு தேவையான அளவு
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் தண்ணீரை ஒன்றாகக் கலந்து, ரவையைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். மாவு நன்றாக உலர்ந்திருந்தால், சிறிது தண்ணீர் தெளிக்கலாம்.
- ரவை ஊறிக்கொண்டிருக்கும் போது, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஊறவைத்த ரவையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து மாவை பிசையவும்.
- மாவை 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஊற வைக்கவும். இது ரவை வடையை பஞ்சுபோன்றதாக மாற்ற உதவும். கடைசியாக சமையல் சோடாவைச் சேர்த்து மாவை கலக்கிக் கொள்ளவும்.
- மாவு ஒட்டும் தன்மையுடனும், எளிதில் பரவக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மாவு கடினமாக இருந்தால் வடையும் கடினமாக இருக்கும். எனவே மாவை மிருதுவாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு ஆழமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- இதை கையில் அல்லது பேப்பரில் வைத்து நடுவில் ஓட்டை வரும்படி தட்டவும். எண்ணெய் நன்கு சூடானதை உறுதிப்படுத்தியதும் மாவை பொறுமையாக எண்ணெய்க்குள் போடவும்.
- வடை பொன்னிறத்தில் நன்கு மொறுமொறுப்பாக மாறும் வரை மிதமான தீயில் வடையை வறுக்கவும். பின்னர் இதை டிஸ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடிகட்டவும்.
- சூடான, மொறுமொறுப்பான ரவை வடை ரெடி. சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்!



Click it and Unblock the Notifications









