Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் ரவையும், 2 வாழைப்பழமும் இருந்தா இந்த இனிப்பை செய்யுங்க... வீட்ல எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க...!
Rava Paniyaram Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒரு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையை வைத்தே அட்டகாசமான சுவையில் பணியாரத்தை செய்து கொடுங்கள்.
பொதுவாக ரவையை வைத்து உப்புமா அல்லது கேசரி போன்றவைதான் செய்ய முடியும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் ரவையை வைத்து பல அட்டகாசமான உணவுகளை செய்யலாம். அப்படி ஒரு சூப்பரான உணவுதான் இந்த ரவை இனிப்பு பணியாரம். இந்த பணியாரம் மென்மையாக இருப்பதோடு, சாப்பிடவும் சுவையாக இருக்கும். முக்கியமாக இப்படி செய்யும் போது, ரவை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் ரவையை வைத்து சுவையான பணியாரத்தை எப்படி செய்யலாம் என்னு தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- ரவா - 1 கப்
- வெல்லம் - 100 கிராம்
- வாழைப்பழம் - 2
- முந்திரி - 10
- தேங்காய் துருவல் - அரை மூடி
- பால் - 2 மேசைக்கரண்டி
- ஏலக்காய் - 3
- எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- ரவாவை சல்லடையில் சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடியாக உடைத்துக் கொள்ளவும் அல்லது தூள் செய்துக் கொள்ளவும்.
- முந்திரியை பொடிப்பொடியாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்த ரவை, துருவிய வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு அதனுடன் வாழைப்பழத்தை தோலை உரித்து போடவும்.
- அதன் பின்னர் அதில் பொடி செய்த ஏலக்காய், பொடியாக நறுக்கிய முந்திரி இரண்டையும் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
- வாழைப்பழத்தை கட்டியில்லாமல் நன்கு பிசைந்து விடவும். அது போல வெல்லத்தையும் நன்கு நசுக்கி விட்டு பிசைந்து பாலை ஊற்றி கெட்டியாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அதிகம் பால் சேர்க்க வேண்டாம், ஏனெனில் அதிகம் பால் சேர்த்தால் எண்ணெய்யில் போடும் போது பிரிந்து விடும்.
- நன்றாக பிசைந்து ஊற வைத்த மாவை எடுத்து ஒரு முறை நன்கு பிசைந்து விட்டு அதிலிருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து போண்டா போல உருட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போண்டா போல உருட்டியதை எண்ணெயில் போட்டு தீயை குறைத்து வைத்து ஒரு நிமிடம் கழித்து பொன்னிறமாக ஆனதும் திருப்பி விடவும்.
- திருப்பி விட்டு சிவந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவா கலந்திருப்பதால் அதிக நேரம் எண்ணெயில் இருந்தால் கருத்து விடும்.
- இதை போல எல்லா மாவையும் வடைப் போல செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சூடான ரவா பணியாரம் ரெடி!



Click it and Unblock the Notifications