Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
Immunity Booster Rasam Recipe In Tamil: குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. மேலும் தற்போது அடிக்கடி மழையும் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. இப்படி காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். ஆனால் இப்படியான பிரச்சனைகள் வருகிறது என்றால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.
இந்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்படியான ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிட்டால், சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசத்தை ஒருமுறை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/3 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தண்ணீர் - 2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* புளி தண்ணீர் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* அரைத்த பொடி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து, அதை நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பருப்பில் 1 1/2 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு சேர்த்து 2
நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து, 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பருப்பை நன்கு மசித்துக்
கொள்ள வேண்டும். பின் அதில் 2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயத் தூள், கடுகு, கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, மூடி
வைத்து குறைவான தீயில் வைத்து 3-4 நிமிடம் தக்காளியை மென்மையாகும் வரை
வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து தக்காளியை நன்கு மசித்து
விட்டு, 1/2 கப் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து மூடி வைத்து 5
நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளறி, பருப்பை அப்படியே ஊற்றி, 8 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியை தூவி, 2 டேபிள் ஸ்பூன் அரைத்த மிளகு
சீரகப் பொடியை சேர்த்து கிளறி, 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











