Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..
Ragi Laddu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவும், ரவையும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் லட்டு செய்யுங்கள்.

இந்த ராகி லட்டுவில் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இந்த லட்டுவை குழந்தைகள் தினமும் 1-2 உட்கொண்டு வந்தால், வயிறும் நிரம்பும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக இந்த லட்டுவை ஒருமுறை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த ராகி லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பாதாம் - 10 (நறுக்கியது)
* முந்திரி - 10 (நறுக்கியது)
* ரவை - 1/2 கப்
* வெள்ளை எள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
* ராகி மாவு - 2 கப்
வெல்ல நீருக்கு...
* வெல்லம் - 1 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* ஏலக்காய் - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து வறுத்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே நெய்யில் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வெள்ளை எள்ளு சேர்த்து 1 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* அதன் பின் ராகி மாவை சேர்த்து 5-7 நிமிடம் நன்கு வறுத்து இறக்க
வேண்டும்.
* பிறகு மற்றொரு பாத்திரத்தில் 1 1/4 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து,
அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி, ஏலக்காயை தட்டி சேர்த்து அடுப்பில்
வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம்
கரைந்ததும், அதை இறக்கி ராகி மாவில் தேவையான அளவு வடிகட்டி ஊற்றி,
அந்த ராகி வாணலியை அடுப்பில் வைத்து, நன்கு கட்டிகளின்றி கலந்து விட
வேண்டும்.
* ராகி மாவானது கெட்டியாக தொடங்கியதும், அதில் வறுத்து முந்திரி,
பாதாமை சேர்த்து கிளறி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வரும் வரை
குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டினால் சுவையான ராகி லட்டு தயார்.



Click it and Unblock the Notifications
