Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சத்தான.. தினை உப்புமா
உங்களுக்கு தினை உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை உப்புமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
காலை வேளையில் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் காலை உணவு தான் ஒரு நாளின் மிகவும் முக்கியமான உணவு. காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட காலை உணவின் போது நல்ல சத்தான உணவை உட்கொண்டால், அந்த சத்துக்களால் உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

காலை உணவுகளிலேயே மிகவும் சத்தானது உப்புமா. உங்களுக்கு ரவை உப்புமா பிடிக்காமல் போகலாம். ஆனால் சிறுதானிய வகையைச் சேர்ந்த தினையைக் கொண்டு உப்புமா செய்து பாருங்கள். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் இந்த தினை உப்புமாவுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளையும் சேர்த்து சமைத்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு தினை உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தினை உப்புமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தினை - 1/2 கப்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5-6 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் தினையை நீரில் 2-3 முறை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* கடுகு நன்கு வெடித்ததும், அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவிய தினையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு மூடியைக் கொண்டு வாணலியை மூடி வைத்து, தினையை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு வற்றி தினை நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, உப்புமாவின் மேல் கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான மற்றும் சத்தான தினை உப்புமா தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
