Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இந்த உணவு தான் ரொம்ப பிடிக்குமாம்.. உங்க வீட்டுல அத ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க...
Pushpa 2 Actor Allu Arjuns Favourite Food Hyderabadi Chicken Biryani: இன்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்துள்ளது. புஷ்பா 1 திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, புஷ்பா 2 திரைப்படம் எப்படி இருக்கும், நடிகர் அல்லு அர்ஜுன் இதில் எந்த அளவு தனது அனல் பறக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறிய ஒவ்வொருவரும் ஆவலாக இருப்போம்.
நடிகர் அல்லு அர்ஜுன் என்ன தான் தெலுங்கு நடிகராக இருந்தாலும், அவர் சென்னையில் பிறந்தவர். சென்னையில் பிறந்ததாலும், இவர் வளர்ந்தது ஐதராபாத்தில் தான். அல்லு அர்ஜுன் எப்போதும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வார். அதே சமயம் இவருக்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ரொம்ப பிடிக்கும். இன்று புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்துள்ளதால், இதைக் கொண்டாட விரும்பினால், அல்லு அர்ஜுனுக்கு பிடித்த ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு கொண்டாடுங்கள்.

உங்களுக்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை எப்படிசெய்வதென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* பாசுமதி அரிசி - 1/2 கிலோ (நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ளவும்)
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 2
* ஜாவித்ரி - 2
* ஏலக்காய் - 4
* பெரிய வெங்காயம் - 4 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 8-10 (கீறியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 400 மிலி
* மிளகாய் தூள் - 2 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* குங்குமப்பூ - 1 கிராம் (சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 150 மிலி
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய 2 வெங்காயத்தை
சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்து, அதில் 1 1/2
டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2
டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா, 2 பச்சை மிளகாய்,
சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா, சிறிது உப்பு , 200 மிலி தயிர்,
வறுத்த வெங்காயம் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி
இலை, ஜாவித்ரி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் மீதமுள்ள 2 வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் தக்காளியையும்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
சேர்த்து 2 நொடிகள் கிளறி, பின் தயிர் சேர்த்து 1-2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து,
5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் 200 மிலி நீரை ஊற்றி கிளறி விட்டு, 10 நிமிடம் சிக்கனை
வேக வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நீரை ஊற்றி, அதில் பட்டை,
கிராம்பு, ஏலக்காய், பிரியாண இலை, கொத்தமல்லி, புதினா, உப்பு, எண்ணெய்
ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை
சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக
வைக்க வேண்டும். சாதமானது 60 சதவீதம் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* மறுபுறம் மற்றொரு அடுப்பில் பிரியாணி பாத்திரத்தில் வெந்து
கொண்டிருக்கும் சிக்கனை கிரேவியுடன் சிறிது எடுத்து ஒரு பாத்திரத்தில்
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயாரான சாதத்தை ஒரு சல்லடை கரண்டியால் வடிகட்டி எடுத்து,
மேலே பரப்ப வேண்டும். பின் ஒரு கரண்டியை எடுத்து, அதன் பின்பகுதியால்
சாதத்தை கிளறி விட வேண்டும்.
* பின் அடுத்த லேயராக தனியே எடுத்து வைத்துள்ள சிக்கன் மற்றும்
கிரேவியை ஊற்றி, அதன் பின் மேலே சாதத்தை பரப்பி விட வேண்டும். அதன்
பின் மீண்டும் கரண்டியின் பின்பகுதியால் சாதத்தை கிளறி விட
வேண்டும்.
* கடைசியாக அதில் சிறிது கொத்தமல்லி, புதினா தூவி, 1/2 டீஸ்பூன்
பிரியாணி மசாலாவையும் தூவி, பின் குங்குமப்பூ நீரை ஊற்றி, 1 டேபிள்
ஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் கிரேவியை மீண்டும் மேலே ஊற்ற
வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து, அது நன்கு
சூடானதும், இந்த பிரியாணி பாத்திரத்தை மேலே வைத்து, பாத்திரத்தை மூடி,
மேலே ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி வைத்து, 15-20 நிமிடம் குறைவான
தீயில் தம் போட்டு இறக்கி, கிளறினால், சுவையான ஹைதராபாத் சிக்கன்
பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications










