Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
தக்காளி சட்னியை இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் அரைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
Punjabi Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் எப்போதும் தேங்காய் சட்னியை மட்டுமே அரைக்க முடியாதல்லவா?

தேங்காய் சட்னிக்கு அடுத்தப்படியாக இட்லி, தோசைக்கு அதிகம் அரைக்கப்படும் சட்னி என்றால் அது தக்காளி சட்னிதான். தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். ஆனால் தக்காளி சட்னியை நூற்றுக்கணக்கான வழிகளில் அரைக்கலாம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது பஞ்சாப் ஸ்டைல் தக்காளி சட்னி. இது நாம் வீடுகளில் வழக்கமாக அரைக்கும் தக்காளி சட்னி போல அல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வழியில் அரைக்கப்படும் சட்னியாகும். ஆனால் இந்த சட்னியில் சில கூடுதல் பொருட்கள் சேர்க்கப்படும். இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபமானதாகும்
உங்களுக்கு பஞ்சாப் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாப் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 5 பூண்டுப் பல்
- 2 ஸ்பூன் புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ஒரு சிட்டிகை சர்க்கரை
செய்முறை:
- முதலில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை நெருப்பில் சுட்டெடுக்கவும்.
- தக்காளியின் தோலை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் சுட்ட பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி இலைகள் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இதை கொரகொரப்பான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியையும் கொரகொரப்பான விழுதாக அரைத்து அதே கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு, சீரகத் தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
