Latest Updates
-
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒருவருக்கு தவறான குரூப் இரத்தம் செலுத்தப்பட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? -
சரும வறட்சி அதிகமா ஏற்படுதா? அப்ப காய்ந்த ரோஜாப்பூ இதழை வெச்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. -
இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்? -
பொய் சொல்வதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு... உங்க ராசி எப்படி? -
சித்திரகுப்தர் எப்படி எமதர்மனின் உதவியாளராக மாறினார்? இறப்பிற்கு ஏன் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது தெரியுமா? -
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் உணவு எது? இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும்
Punjabi Tomato Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். சட்னியில் பல வெரைட்டிகள் இருந்தாலும், தேங்காய் சட்னிக்கு அடுத்தப்படியாக தக்காளி சட்னியே பெரும்பாலானோரின் விருப்பமான சட்னியாக இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சட்னியையே பலவாறு சமைக்கலாம். இந்த தக்காளி சட்னியுடன் ஒவ்வொரு பொருளை கூடுதலாக சேர்க்கும் போது அதன் சுவையில் வித்தியாசம் ஏற்படுகிறது.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி. இந்த பஞ்சாபி தக்காளி சட்னி செய்வதற்கு 4-5 பொருட்களே போதுமானது. இந்த பஞ்சாபி தக்காளி சட்னி வழக்கமான தக்காளி சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இப்படி ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த பஞ்சாபி தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 4 அல்லது 5 பல்
- கொத்தமல்லி இலை - 2 கைப்பிடி அளவு
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- கருப்பு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை மற்றும் பச்சை மிளகாயை தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு உலர விடவும். பின் கொத்தமல்லியின் தண்டு பகுதியை நீக்கி விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
- சுத்தம் செய்த கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் சேர்த்து அலசி வடித்து மீண்டும் தண்ணீரில் சிறிது நேரம் விட்டுவிட்டு, பின் தண்ணீரின் மேற்பகுதியில் மிதக்கும் இலைகளை எடுத்து தனியே வைக்கவும். இதனால் அதில் இருக்கும் மண் அடியில் தங்கி விடும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் கருகி விடாமல் நன்கு சிவக்கும் படி வறுத்து ஆற விடவும். பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பின் தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் பூண்டை ஒரு மெலிதான கம்பியில் குத்தியோ அல்லது இடுக்கில் பிடித்தோ நேரடியாக நெருப்பில் வைத்து நன்கு சுட்டு எடுத்து கொள்ளவும்.
- சுட்டு வைத்த பொருட்கள் நன்கு ஆறியதும், தக்காளியின் தோலை நீக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பூண்டின் மேற்பகுதியில் இருக்கும் தோலை நீக்கி விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
- உரலில் அல்லது வீட்டில் இருக்கும் இடிக்கல்லில் சுட்டு வைத்த பச்சை மிளகாய், தோல் நீக்கி வைத்த பூண்டு பற்களை சேர்த்து நன்கு இடிக்கவும். பின் அதனுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு இடிக்கவும்.
- கொத்தமல்லி இலைகள் நன்கு சட்னி பதத்திற்கு மசிந்ததும், சுட்டு தோல் உரித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசித்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து வைக்கவும். பின் அதனுடன் கடுகு எண்ணெய், கருப்பு உப்பு, வறுத்து அரைத்த சீரகப்பொடியில் இருந்து ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேர்த்து கொள்ளவும்.
- கடைசியாக அதனுடன் ஒரு சிட்டிகை அளவு சர்க்கரை சேர்த்து கலந்தால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி ரெடி! இது சப்பாத்தி, இட்லி, தோசை, அல்லது சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
