Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இட்லி, தோசைக்கு வித்தியாசமான சட்னி வேணுமா? அப்ப இந்த புளி மிளகாய் சட்னி செய்யுங்க... சூப்பரா இருக்கும்...!
Puli Kara Chutney Recipe in Tamil: என்னதான் உணவில் அறுசுவை இருந்தாலும் கசப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பை அதிகமாக தவிர்த்து விடுவோம் அல்லது அளவாக எடுத்து கொள்ளுவோம். ஆனால் இனிப்பு, புளிப்பு மற்றும் காரத்தை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதிக அளவில் எடுத்து கொள்ளுவோம்.
வழக்கமாக செய்யும் சட்னி வகைகளில் பெரும்பாலும் காரம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் புளிப்பு, இனிப்பு மற்றும் காரம் என மூன்றும் சேர்த்து சட்னி செய்யலாம். வாங்க புளி மிளகாய் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- புளி - எலுமிச்சை அளவு
- பச்சை மிளகாய் - 10
- சின்ன வெங்காயம் - 15 அல்லது 20
- பூண்டு - 10 அல்லது 12
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- பெருங்காய்த்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மஞ்சள்தூள் - ¼ டீ ஸ்பூன்
- நல்லெண்ணை - தேவையான அளவு
- வெல்லம் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- புளியின் மேற்பகுதியில் இருக்கும் ஓடு மற்றும் குப்பையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் புளியை சுடு தண்ணீரில் சேர்த்து ஊற வைக்கவும்.
- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தின் மேற்பகுதியில் இருக்கும் கருப்பு நிற பூஞ்சையை தண்ணீர் சேர்த்து சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.
- கழுவிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக தண்ணீரில் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து தூசி இல்லாமல் வடித்து எடுத்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பூண்டு வதக்கியதும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின் அதில் கரைத்து வைத்த புளிக் கரைசலை சேர்த்து கிளறவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- பின் அதில் வெல்லம் சேர்த்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.
- கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான புளி மிளகாய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
