Latest Updates
-
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும்
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Pudina Vetrilai Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் செய்வீர்களா? பொதுவாக ரசம் செரிமானத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் அஜீரண கோளாறால் அதிகம் சிரமப்படுபவர்கள் சாதாரண ரசத்திற்கு பதிலாக புதினா மற்றும் வெற்றிலை கொண்டு ரசம் செய்யும் போது, செரிமான பிரச்சனையும் தீரும், சுவையும் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இந்த ரசத்தை மற்ற நாட்களில் செய்து சாப்பிடுகிறீர்களோ இல்லையோ, அசைவ உணவுகளை சமைக்கும் நாட்களில் செய்து சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு இந்த புதினா வெற்றிலை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா வெற்றிலை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* வெற்றிலை - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை 3 கப் நீரில் ஊற
வைத்து, பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் வெற்றிலையை சேர்த்து கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள் மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் புளிச்சாறு
மற்றும் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, 1 கொதி வந்ததும், அதை இறக்கினால், சுவையான புதினா வெற்றிலை
ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
