Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Potato Chips Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் உங்கள் பிள்ளைகள் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஸ்நாக்ஸ் கேட்பார்களா? அதுவும் மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட கேட்பார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு சிப்ஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் உருளைக்கிழங்கு என்றால் விரும்பி சாப்பிடுவார்களா?

அப்படியானால் அந்த உருளைக்கிழங்கு கொண்டு சிப்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கை சீவி சிப்ஸ் போடாமல், அரிசி மாவு சேர்த்து சிப்ஸ் செய்து கொடுங்கள். இப்படி உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து கொடுத்தால், சுவையும் வித்தியாசமாக இருக்கும், விரும்பியும் சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு அந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
* தண்ணீர் - 1/2 கப்
* அரிசி மாவு - 2 கப்
* சோள மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 2 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில்
சேர்த்து, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை எடுத்து, அதன்
தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தோல் நீக்கிய உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் துருவிய உருளைக்கிழங்கை மிக்சர் ஜாரில் சேர்த்து, 1/2 கப்
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த உருளைக்கிழங்கை எடுத்து, அத்துடன் 2
கப் அரிசி மாவு, 1/2 கப் சோள மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீர்
போதவில்லை என்றால், சிறிது நீரை தெளித்து நன்கு மென்மையாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்த மாவை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை சற்று அதிகமாகவே எடுத்து உருட்டி,
ஒரு பட்டர் ஷீட் மேல் வைத்து, அதன் மேல் மற்றொரு பட்டர் ஷீட்டை
வைத்து, மிதமான அளவில் தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் மேலே உள்ள பட்டர் ஷீட்டை எடுத்து விட்டு, ஒரு முட்கரண்டி
கொண்டு, ஆங்காங்கு துளையிட வேண்டும்.
* அடுத்து ஒரு பிஸ்கட் கட்டர் அல்லது வட்டமான மூடியை கொண்டு தேய்த்த
மாவை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து
மாவையும் வட்ட துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெட்டி வைத்துள்ள துண்டுகளை சேர்த்து,
மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications