Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
2 உருளைக்கிழங்கும், 1 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Crispy Potato Cutlet Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் புதுமையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் வீட்டில் உருளைக்கிழங்கும், கோதுமை மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் மொறுமொறுப்பான கட்லெட்டை செய்து கொடுங்கள்.
இந்த கட்லெட் வழக்கமாக செய்வது போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். இது ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, ஒரு சுவையான டிபனாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த ஸ்நாக்ஸை செய்தால் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லி, 1 டீஸ்பூன் எண்ணெய், சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்
தூள் சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் தடவி மூடி, தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள்
தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து, சப்பாத்தி போன்று
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி
விட்டு, அப்படியே ரோல் போன்று உருட்ட வேண்டும்.
* அடுத்து கத்தியால் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு துண்டையும் தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ளதை சேர்த்து, முன்னும்
பின்னும் மொறுமொறுப்பாக பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு
கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications