2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Potato Peanut Balls Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட மொறுமொறுவென்று ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் சற்று வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸை கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு 10 நிமிடத்தில் அட்டகாசமான உருளைக்கிழங்கு வேர்க்கடலை பால்ஸ் செய்து கொடுங்கள். இந்த ஸ்நாக்ஸை ஒரு முறை செய்தால், உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள்.

Potato Peanut Balls How To Make Urulai Kizhangu Verkadalai Balls Recipe

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு வேர்க்கடலை பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வேர்க்கடலை பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
* பிரட் - 3 துண்டுகள்
* வேர்க்கடலை - 50 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 2 கப்
* இஞ்சி - சிறிய துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரட் தூள் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் பிரட் துண்டுகளை நீரில் நனைத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, அவற்றை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் பொடித்ததை உருளைக்கிழங்குடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து, அவற்றையும் உருளைக்கிழங்குடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் கரம் மசாலா, சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக உருட்டி, பிரட் தூளில் போட்டு உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், உருளைக்கிழங்கு வேர்க்கடலை பால்ஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 25, 2026, 18:14 [IST]
Desktop Bottom Promotion