உருளைக்கிழங்கை உத்தரகாண்ட் ஸ்டைலில் இந்த மாதிரி வறுவல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!

Posted By:

Aloo Ke Gutke Recipe in Tamil: சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் முக்கியமானது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான உருளைக்கிழங்கு ரெசிபிதான் ஆலு கே குட்கே.

ஆலு கே குட்கே அப்படின்னா என்னன்னு கேட்கறீங்களா? இல்ல என்ன பொருட்கள் சேர்த்து எப்படி செய்வாங்கன்னு யோசிக்கிறீங்களா? பெருசா ஒன்னும் இல்லைங்க, நம்ம ஊர் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கிற உருளைக் கிழங்கு வறுவல் தான். ஆனா அதை உத்தரகாண்ட் மக்கள் சேர்க்கிற தனித்துவமான மசாலாவை சேர்த்து செஞ்சா ஆலு கே குட்கே ரெடி. இந்த வித்தியாசாமான உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Potato Fry Aloo Ke Gutke Recipe How to Prepare Aloo Ke Gutke

தேவையான பொருட்கள்:

- உருளைக்கிழங்கு - 4
- கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு)
- கொத்தமல்லி இலை - சிறிதளவு (தண்டு பகுதியுடன்)
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- வரமிளகாய் - 3
- கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

- முதலில் உருளைக்கிழங்கை மண் இல்லாமல் சுத்தமாக அலசி எடுத்து கொள்ளவும்.

- பின் அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு இரண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
- அதனுடன் சில துளிகள் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

- இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் அடங்கும் வரை காத்திருக்கவும்.

- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

- கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் சுத்தமாக அலசி உலர விடவும்.

- வீட்டில் இருக்கும் சிறிய உரல் அல்லது அம்மியில் கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்றாக இடிக்கவும்.

- ஓரளவிற்கு பொடியானதும் அதனுடன் தோல் சீவி வைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

- அதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக மசிக்கவும்.

- பின் அதனுடன் கரம் மசாலா, காஷ்மீர் மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக இடித்து எடுத்து கொள்ளவும்.

- உருளைக்கிழங்குகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

- பின் அதனுடன் பெருங்காயம், கருவேப்பிலை, மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

- பின் அதில் நறுக்கிய உருளை கிழங்கு மற்றும் தேவையான அளவு சேர்த்து உப்பு கிளறவும்.

- மசாலா நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான உத்தரகாண்ட் ஸ்பெஷல் உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion