2 உருளைக்கிழங்கும், 2 முட்டையும் வெச்சு இப்படியொரு டைம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..

Posted By:

Potato Cheese Omelette Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அதுவும் அடிக்குற வெயிலில் எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று கொடுக்காமல், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களான முட்டை மற்றும் உருளைக்கிழங்கைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான ஆம்லெட் செய்து கொடுங்கள். இந்த ஆம்லெட்டை ஒருமுறை செய்து கொடுத்தால் போதும், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். இது ஒரு நல்ல டிபனாக மட்டுமின்றி, டின்னராகவும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Potato Cheese Omelette How To Make a Potato Cheese Omelette Recipe

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 2
* முட்டை - 2
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி சாஸ் - சிறிது
* சீஸ் - சிறிது

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 2 சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும், கலந்து வைத்துள்ளதை ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து, பின் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது தக்காளி சாஸைத் தடவி, துருவிய சீஸை தூவி, மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் தயார்.

Image Courtesy: kurinji. com

[ of 5 - Users]
Story first published: Sunday, May 12, 2024, 20:19 [IST]
Desktop Bottom Promotion