Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
பூஜைக்கு வாங்குன பொரி நிறைய இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
Pori Cutlet Recipe In Tamil: ஆயுத பூஜைக்கு வாங்கின பொரி நிறைய இருக்குதா? அதுவும் பொரி நமத்து போய் உள்ளதா? அந்த பொரியை தூக்கிப் போட விருப்பம் இல்லையா? மேலும் ஒரே மாதிரி பொரியை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் கட்லெட் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் பொரியைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். இந்த பொரி கட்லெட் வழக்கமாக சாப்பிடும் கட்லெட்டைப் போன்று இல்லாமல், சற்று வித்தியாசமான சுவையிலும் இருக்கும். முக்கியமாக இந்த கட்லெட் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு பொரி கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 3 கப்
* கேரட் - 1 (துருவியது)
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (மசித்தது)
* இஞ்சி - 1/4 இன்ச் (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - சிறிது (லேசாக அரைத்தது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1-2 ஸ்பூன் (தேவைப்பட்டால்)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பொரியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வேக வைத்து மசித்த
உருளைக்கிழங்கு, துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் லேசாக அரைத்த பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய
கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்
சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்த பொரியை, நீரை பிழிந்துவிட்டு சேர்த்து
பிசைந்து, முதலில் உருட்டி, கட்லெட் போன்று தட்டி, ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கட்லெட் உடைந்தால், கடலை மாவை
சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி
சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு, மிதமான தீயில் வைத்து
முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான பொரி
கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
