Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
2 பூண்டு இருந்தா இந்த தொக்கு செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும்...!
Poondu Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு செய்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற எண்ணம் நம்மிடம் வந்து விட்டது.
உண்மையில் இட்லி, தோசைக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் பூண்டு தொக்கு 1 வாரம் வரை கூட வைத்த சாப்பிடக்கூடியது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

பூண்டு இதன் மூலப்பொருளாக இருந்தாலும் இதனுடன் சேர்க்கப்படும் தக்காளி, வெங்காயம் போன்றவை இதன் சுவையை மேலும் அதிகரிக்கும். இந்த பதிவில் சூப்பரான பூண்டு தொக்கை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- முழு பூண்டு - 2
- தக்காளி - 3
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 5
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மல்லி தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- வெந்தயம் - சிறிதளவு
- சீரகம் - கால் ஸ்பூன்
செய்முறை:
- பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.வெங்காயம் சற்றே வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமானதும் பொரித்து வைத்திருக்கும், பூண்டு + இஞ்சியை சேர்த்து கிளறவும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் ஆன பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- தக்காளி குழையும் அளவிற்கு வெந்தவுடன், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.இந்த பூண்டு தொக்கு, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
- இதனை காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் அடைத்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
- ஒருவேளை உங்களுக்கு குழம்பாக வேண்டுமென்றால், இறுதியில் சற்றே தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, உப்பை சரிபார்த்துக் கொள்ளவும்.



Click it and Unblock the Notifications
