Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ!
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Poondu Thokku Recipe In Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து சமைத்து போரடிக்கிறதா? என்றாவது ஒருநாள் சமையலுக்கு லீவு கிடைக்காதா என்று ஏங்குபவரா? அப்படியானால் ஒரு பாட்டிலில் பூண்டு தொக்கை செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பூண்டு தொக்கை ஒருமுறை செய்தால், அதை 3 மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

அதுவும் இந்த தொக்கை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் போன்றும் பயன்படுத்தலாம். முக்கியமாக இந்த பூண்டு தொக்கை ஹாஸ்டலில் இருக்கும் பிள்ளைகளுக்கு, வெளியூரில் தங்கி வேலை செய்யும் பேச்சுலர்களுக்கு செய்து கொடுக்கலாம்.
உங்களுக்கு இந்த பூண்டு தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* பூண்டு - 1 கப்
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 8 வரமிளகாயும், 5 காஷ்மீரி வரமிளகாயும்
சேர்த்து நன்கு ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் 1 கப் பூண்டு பற்களை சேர்த்து, நிறம் மாறும்
வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த வரமிளகாய் மற்றும் காஷ்மீரி
வரமிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, நீரை
ஊற்றாமல், பூண்டு வதக்கிய எண்ணெயை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த தொக்கை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தொக்குடன் சேர்த்து கலந்தால், சுவையான
பூண்டு தொக்கு தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு
1 டேபிள் ஸ்பூன் பூண்டு தொக்கில்,
* கலோரிகள்: சுமார் 55-60 கலோரி (பெரும்பாலும் நல்லெண்ணெயில் உள்ள
ஆரோக்கியமான கொழுப்புகளிலிருந்து கிடைப்பவை)
* புரதம்: சுமார் 0.6 கிராம்
* கார்போஹைட்ரேட்டுகள்: சுமார் 3.5 கிராம்
* நார்ச்சத்து: சுமார் 0.4 கிராம்
* கொழுப்பு: சுமார் 4.5 கிராம் (பெரும்பாலும் இதயத்திற்கு உகந்த,
நிறைவுறா கொழுப்புகள்)
எதோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்?
* பூண்டு தொக்கை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்தும்
சாப்பிடலாம்.
* தயிர் சாதத்திற்கு ஊறுகாய் போன்றும் எடுத்துக் கொள்ளலாம்.
* சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
