Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இட்லிக்கு ஒரு டைம் இந்த ஸ்டைலில் பூண்டு சட்னி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Poondu Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இட்லிக்கு பொதுவாக சற்று புளிப்பான சட்னி இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் தக்காளி சட்னியை செய்ய முடியாது அல்லவா? எனவே இன்று பூண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் செய்யுங்கள். இதனால் சட்னி வேற லெவல் சுவையில் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்யும் போது உங்கள் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 10
* உளுத்தம் பருப்பு - 1/4 கப் (50 கிராம்)
* பூண்டு - 1/4 கிலோ
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், புளியை சேர்த்து பச்சை வாசனை போக எண்ணெயில் வதக்க
வேண்டும்.
* பின் அதில் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து, பச்சை வாசனை போய் நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் குளிர வைத்ததை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்
பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி,
சட்னியில் உள்ள நீர் சற்று வற்றும் வரை கிளறி இறக்கினால், சுவையான
பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











