Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
காரசாரமான... மிளகு மண்ணீரல் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Milagu Maneeral Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரத்தசோகை நோயாளிகள் உள்ளனரா? அப்படியானால் அடிக்கடி மண்ணீரல் வாங்கி செய்யுங்கள். ஆனால் நீங்கள் செய்யும் மண்ணீரல் அவ்வளவு ருசியாக இருக்காதா? அதோடு உங்கள் வீட்டில் உள்ளோர் மண்ணீரல் சாப்பிட மறுப்பார்களா? அப்படியானால் அடுத்தமுறை மண்ணீரலை வாங்கினால், அதைக் கொண்டு மிளகு கிரேவி செய்யுங்கள்.
இந்த மிளகு மண்ணீரல் கிரேவியானது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகளுக்கு மண்ணீரலை அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது. குறிப்பாக உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மண்ணீரலை உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு குறுகிய நாட்களில் அதிகரிக்கும்.

உங்களுக்கு மிளகு மண்ணீரல் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு மண்ணீரல் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மண்ணீரல் - 2
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 2 சிட்டிகை
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மண்ணீரலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி குறைவான தீயில் வைக்க வேண்டும்.
* பின் மண்ணீரலை எடுத்து, துண்டுகளாக்கி, உடனே நீரில் போட்டு அலசி,
வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு
நீரை ஊற்றி கிளறி, உயர் தீயில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும், மூடி
வைத்து, குறைவான தீயில் வைத்து, 10-15 நிமிடம் மிதமான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கிளறி, மிளகுத் தூளை சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான மிளகு மண்ணீரல் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
