Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Peerkangai Saadam Recipe in Tamil: பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பது லெமன் சாதம், தயிர் சாதம் அல்லது தக்காளி சாதம் போன்றவைதான். இதற்கு காரணம் அதன் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே மாதிரியான சாதத்தையே எத்தனை நாட்களுக்குத்தான் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.

உங்கள் குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள் என்றால் அவர்களுக்கு ஆரோக்கியமான காய்கறிகளை சுவையான உணவுகளாக சமைத்துக் கொடுங்கள். அப்படி ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சாதம்தான் பீர்க்கங்காய் சாதம். இந்த பீர்க்கங்காய் சாதம் செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் சுவையானதும் கூட. இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த சாதத்தை அவசியம் முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு சுவையான பீர்க்கங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 கப் சமைத்த சாதம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- 2 வர மிளகாய்
- ¼ ஸ்பூன் பெருங்காயத் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 4 கப் நறுக்கிய பீர்க்கங்காய்
- 2 ஸ்பூன் வாங்கி பாத் பொடி
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- பீர்க்கங்காயை கழுவி தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதேசமயம் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- சாதத்தை சமைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கும்போது, உடைத்த வர மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பீர்க்கங்காய், மஞ்சள் தூள், வாங்கி பாத் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- இதை நன்றாகக் கலந்து, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- பீர்க்கங்காயிலிருந்து நீர் வெளிவரும் என்பதால், இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை அகற்றவும்.
- பீர்க்கங்காய் நன்றாக வெந்து நீர் வற்றும் வரை சமைத்துவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இப்போது சமைத்த சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்து, ரைதாவுடன் சூடாகப் பரிமாறவும்.
- இதே ரெசிபியில் வேறு காய்கறிகளை வைத்தும் முயற்சிக்கலாம்.



Click it and Unblock the Notifications
