Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
அரை கப் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து இப்படி செய்யுங்க... ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்..!
Peerkangai Kadalai Curry Recipe in Tamil: ஒருவர் ஆரோக்கியமாக வா விரும்பினால் அவர்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது அவர்களுடைய உணவு முறையில்தான். ஆரோக்கியமான உணவுகள் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது காய்கறிகள்தான். உடல் எடையைக் குறைப்பது முதல் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது வரை காய்கறிகள் மனித உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
ஆரோக்கியமான காய்கறிகள் என்று வரும்போது அதில் பீர்க்கங்காய் மிகவும் முக்கியமான இடம் வகிக்கிறது. பீர்க்கங்காயை பல வழிகளில் சமைக்கலாம். பொதுவாக பீர்க்கங்காயை பொரியல் அல்லது கிரேவி செய்வார்கள். ஆனால் பீர்க்கங்காயை வேர்க்கடலையுடன் சேர்த்து ஒரு அட்டகாசமான கிரேவி செய்யலாம். அந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான பீர்க்கங்காய் கிரேவியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பிஞ்சு பீர்க்கங்காய் - 1
- சின்ன வெங்காயம் - 15
- பெரிய தக்காளி - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- வேர்க்கடலை - அரை கப்
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
- கசகசா - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- பீர்க்கங்காயைத் தோல் நீக்கி மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியைச் சிறு துண்டுகளாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் தோல் நீக்கிய வேர்க்கடலையைப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்
- வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கசகசா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- தக்காளி வதங்கியதும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்கவும்
- பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேகவிடவும்
- பீர்க்கங்காய் வெந்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து, அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.
- பீர்க்கங்காயை வேக வைக்க தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
- பீர்க்கங்காய் நன்கு கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி தயார்!
- இந்த பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி சாதத்துடன் சாப்பிட மட்டுமின்றி தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
