Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Pavakkai Poriyal Recipe In Tamil: வாரம் ஒருமுறை உணவில் பாவக்காயை சேர்த்து வருவது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கசப்புத்தன்மையால் பாவக்காயை சாப்பிடமாட்டார்களா? அத்தகையவர்களை பாகற்காயை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாவக்காயை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்யுங்கள். இப்படி பொரியல் செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பாவக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாவக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய பாவக்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - சிறிய நெல்லிக்காய் அளவு (சிறிது நீரில் ஊற
வைத்தது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் அல்லது
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயத்தை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பாவக்காயை சேர்த்து நன்கு நிறம்
மாறும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போய், எண்ணெய் பிரியும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு பச்சை வாசனை போய், நீர்
வற்றும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்
சுவையான பாவக்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications
