Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
பிரியாணி சாப்பிட்டு போரடிச்சிருச்சா? இந்த பட்டாணி புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க...டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Pattani Pulav Recipe in Tamil: டின்னருக்கு பொதுவாக நாம் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி போன்ற வழக்கமான டிபன் உணவுகளையே சமைப்போம். ஆனால் இதையே செய்வது நாளடைவில் அனைவருக்கும் போரடிக்கும். இதுபோன்ற சூழலில் வெஜிடபிள் பிரியாணி, புலாவ் போன்ற மதிய உணவிற்கு செய்யக்கூடிய உணவுகளை செய்வது நல்ல மாறுதலாக இருக்கும். ஆனால் வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றை செய்ய அதிக நேரம் தேவைப்படலாம் அல்லது காய்கறிகள் தேவைப்படலாம்.
உங்களிடம் இரண்டுமே இல்லாத போது அதற்கு மாற்றாக பட்டாணி புலாவை செய்யலாம். பட்டாணியில் அதிகளவு புரோட்டின் இருப்பதால் இது சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பட்டாணி புலாவை மதிய உணவிற்கு கூட செய்யலாம். இதனுடன் சிக்கன் கிரேவி வைத்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும். இந்த பதிவில் எளிதில் செய்யக்கூடிய சுவையான பட்டாணி புலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- பாஸ்மதி அரிசி - 200 கிராம்
- பட்டாணி - 150 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- புதினா - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 2 ஸ்பூன்
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- தேங்காய் பால் - 1 கப்
Take a Poll
செய்முறை:
- பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து 1 கப் வரும் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்
- பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் பட்டாணி சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் பால் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
- தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலந்து புதினாவை சேர்த்து மூடி போட்டு மூடவும்.
- நீராவி வந்ததும் விசில் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- ஆவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!
- சண்டே மதியம் வழக்கமாக பிரியாணி செய்யாமல் இதை செய்து சைடிஷாக சிக்கன் அல்லது மட்டன் கிரேவி செய்தால் சண்டே சூப்பராக இருக்கும்!



Click it and Unblock the Notifications
