Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Paruppu Urundai Kulambu Recipe In Tamil: மதியம் குழம்பு வைப்பதற்கு உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சுவையான குழம்பு செய்ய நினைத்தால், பருப்பு உருண்டை குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு செய்வதற்கு துவரம் பருப்பு, கடலை பருப்பு இருந்தால் போதும், அருமையான சுவையில் குழம்பு செய்யலாம்.

பொதுவாக பருப்பு உருண்டை குழம்பை பலவாறு செய்வார்கள். சிலர் பருப்பு உருண்டையை ஆவியில் வேக வைத்தோ, இன்னும் சிலர் வடையாக எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டோ செய்வார்கள். ஆனால் இந்த குழம்பில் அப்படியெல்லாம் செய்ய தேவையில்லை, உருண்டையை தயாரித்த பின், குழம்பு தயாரித்த கடைசியில் சேர்த்து வேக வைத்து இறக்கினால் போதும்.
உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு உருண்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 6 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தக்காளி - 2
* துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த விழுது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* புளி - எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் மற்றம் கடலைப் பருப்பை
எடுத்துக் கொண்டு நீரில் 3 முறை கழுவி, நீரை ஊற்றி 1/2 மணிநேம் ஊற
வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேம் கழித்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்பு, இஞ்சி,
பூண்டு, வரமிளகாய், சோம்பு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, அத்துடன்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளி, தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், வெருங்காயத்
தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக
வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து 10-12 நிமிடம் மிதமான
தீயில் வைத்து வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
பருப்பு உருண்டை குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications