சப்பாத்திக்கு பன்னீரை வெச்சு இந்த மாதிரி சைடு டிஷ் செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...

Posted By:

Paneer Peas Masala Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஸ்பெஷலா ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் பன்னீரும், பச்சை பட்டாணியும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அருமையான சுவையில் ஒரு கிரேவி செய்யுங்கள். இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, புலாவ், பூரி போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பட்டாணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Paneer Peas Masala How To Make a Paneer Peas Masala For Chapati

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - சிறிது
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை பட்டாணி - 100 கிராம்

அரைப்பதற்கு...

* தக்காளி - 3
* முந்திரி - 5

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அந்நீரில் தக்காளியை போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, தக்காளியை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தோல் நீக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் 5 முந்திரியை சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளி முந்திரியை சேர்த்து நன்கு கிளறி விட்டு, எண்ணெய் மிதக்கும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரை மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 8-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் பட்டாணி மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 31, 2024, 22:03 [IST]
Desktop Bottom Promotion