Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
வீட்டிலேயே சுவையான பன்னீர் கோலாபுரி ரெசிபியை செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு பன்னீர் கோலாபுரி ரெசிபியை செய்யுங்கள். இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, நாண், பூரி, புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு பன்னீர் கோலாபுரி ரெசிபியை செய்யுங்கள். இந்த பன்னீர் கோலாபுரி சப்பாத்திக்கு மட்டுமின்றி, நாண், பூரி, புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு அற்புதமான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் கோலாபுரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னிர் கோலாபுரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோலாபுரி மசாலாவிற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 9 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்
* கசகசா - டீஸ்பூன்
* துருவிய தேங்காய - 1/4 கப்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1
* காஷ்மீரி வர மிளகாய் - 5
* பிரியாணி இலை - 1
* ஜாதிக்காய் - 1 சிட்டிகை (துருவியது)
* வெந்தயம் - சிறிது
* பட்டை - 1 இன்ச்
* மிளகு - 4-5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 முதல் 3/4 கப்
பிற பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சீரகம், கல்பாசி, காஷ்மீரி வரமிளகாய், ஜாதிக்காய், பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் கசகசா, எள்ளு விதைகள் மற்றும் துருவிய தேங்காயை சேர்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 3/4 அளவு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து சில நொடிகள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இப்போது மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்கள் மற்றும் வதக்கிய வெங்காயத்தைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1-1 1/4 கப் நீரை ஊற்ற நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து 7-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து துண்டுகளாக்கப்பட்ட பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பன்னீர் கோலாபுரி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
