Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
பன்னீர் இருந்தா.. சப்பாத்திக்கு 10 நிமிஷத்துல இந்த சைடு டிஷ் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Paneer Bhurji Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி பன்னீர் சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக அதே சமயம் சிம்பிளாக பன்னீரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் புர்ஜி மசாலாவை செய்யுங்கள்.
இப்படி பன்னீரை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த மசாலா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஒருமுறை இப்படி பன்னீரை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் செய்து கொடுக்க கேட்பார்கள். இந்த மசாலாவை பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1
* மல்லித் தூள் - 1
* மஞ்சள் தூள் - 1/4
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* பன்னீர் - 250 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
* வெண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலை மாவு சேர்த்து குறைவான தீயில் வைத்து, லேசாக நிறம்
மாற கிளறி விட்டு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாயை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
மிதமான தீயில் வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து பன்னீரை கைகளால் உதிர்த்துவிட்டு, கொதித்துக்
கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, 1 கப் நீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 4
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி மற்றும் நெய்/வெண்ணெய் சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
