Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பலாக்கொட்டை இருந்தா இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Palakottai Poriyal Recipe in Tamil: இது பலாப்பழ சீசனாகும். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பெருபாலான மக்களுக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்றாகும். பலாச்சுளை மட்டுமல்ல பலாக்கொட்டையும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்ததாகும். பொதுவாக பலாக்கொட்டையை வேகவைத்தோ அல்லது குழம்புகளிலோ போட்டுத்தான் சாப்பிடுவார்கள். ஆனால் பலாக்கொட்டையை வைத்து ஒரு சூப்பரான பொரியலை செய்யலாம்.

பலாக்கொட்டை பிடிக்காதவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள். பலாக்கொட்டையை இப்படி பொரியலை செய்து கொடுத்தால் அதை பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பலாக்கொட்டை பொரியலை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இதில் பல ஊட்டச்சத்துக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான பலாக்கொட்டைப் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்கொட்டைப் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பலாக்கொட்டை - 30
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- பெரிய வெங்காயம் - 1
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பலாக்கொட்டையை நன்றாக காய வைக்கவும். ஒருவேளை பலாக்கொட்டையை காய வைக்க நேரமில்லையென்றால் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் பலாக்கொட்டையை 5 நிமிடம் வறுக்கவும்.
- இவ்வாறு செய்யும்போது அவற்றின் தோல் வெடித்து, பலாக்கொட்டைகள் மென்மையாகவும், பாதி வெந்த நிலையிலும் மாறிவிடும். பின்னர் தோலை எளிதாக உரித்துவிட்டு, கொட்டைகளைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துப் பொரியவிட்ட பிறகு, நறுக்கிய பலாக்கொட்டைகளைச் சேர்க்கவும். பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதேசமயம் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், வெங்காயம், சாம்பார் தூள் மற்றும் சீரகம் ஆகியவற்றை, தண்ணீர் சேர்க்காமல், கொரகொரப்பாக இருக்கும் வகையில் அரைத்துக்கொள்ளவும்.
- வதக்கிய பலாக்கொட்டையுடன் அரைத்தப் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். பலாக்கொட்டைகளின் மீது அரைத்த மசாலா நன்கு படும்படி நன்றாகக் கலக்கவும். அரை கப் தண்ணீர் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கிளறவும்.
- அடுப்பைச் சிம்மில் வைத்து, ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும். குக்கரில் உள்ள ஆவி முழுமையாக வெளியேறிய பிறகு மூடியைத் திறக்கவும்.
- கூடுதல் தண்ணீர் எஞ்சியிருந்தால், அது வற்றும் வரை சிறிது நேரம் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் அடுப்பை அணைக்கவும்.
- இந்த பொரியல் சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துக்கு அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications