Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்...
Palakkai Sukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பலாக்காய் பிடிக்குமா? ஆனால் அதை எப்படி சமைப்பது என்று உங்களுக்கு தெரியாதா? அப்படியானால் ஒருமுறை பலாக்காயை வாங்கி சுக்கா செய்து பாருங்கள். இந்த பலாக்காய் சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும்.
முக்கியமாக இந்த பலாக்காய் சுக்காவானது மட்டன் சுக்கா போன்ற சுவையில் இருக்கும். இந்த பக்குவத்தில் பலாக்காயை செய்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். அதுமட்டுமின்றி, அடிக்கடி செய்து கொடுக்கவும் கேட்பார்கள்.

உங்களுக்கு பலாக்காய் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்காய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு பலாக்காய் - 1
* தண்ணீர் - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
வறுத்து மசாலா அரைப்பதற்கு...
* அன்னாசிப்பூ - 1 இதழ்
* கிராம்பு - 3
* ஜாதிபத்திரி - 1 சிறிய துண்டு
* பட்டை - 1 சிறிய துண்டு
* கல்பாசி - சிறிது
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 15
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தேங்காய் - 4 சில்லு
* சின்ன வெங்காயம் - 2
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 4 ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருபபு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பலாக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி நீரில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட பலாக்காய், 1 டம்ளர் நீர்,
மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து நன்கு கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து மூடி, 3 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அன்னாசிப்பூ, கிராம்பு,
ஜாதிபத்திரி, பட்டை, கல்பாசி, ஏலக்காய், சோம்பு, மல்லி, மிளகு,
சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள்
தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள பலாக்காயை மட்டும் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு கிளறி,
சிறிது நீரை ஊற்றி பிரட்டி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 10
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் நன்கு வெந்ததும், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி
இறக்கினால், சுவையான பலாக்காய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications
