சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது

Posted By:

Palakkad Chicken Fry Recipe in Tamil: நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சண்டே வருவதே ஓய்வெடுப்பதற்கும், அசைவ உணவுகளை ருசித்து சாப்பிடுவதற்கும்தான். அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். ஏனெனில் அதன் விலையும், எளிதான ரெசிபிக்களும், அட்டகாசமான சுவையும் சிக்கனை பலருக்கும் விருப்பமான உணவாக மாற்றியுள்ளது.

Palakkad Chicken Fry Recipe How to Make at Home in Tamil

உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? சிக்கனை ஒரே மாதிரி வறுவல், சில்லி சிக்கன் அல்லது சுக்கா செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஒரே மாதிரியான சிக்கன் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக சிக்கனை சமைக்க ஆசைப்படுறீங்களா? அப்படினா இந்த பாலக்காடு ஸ்டைல் சிக்கனை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். கேரளாவின் அசைவ உணவுகள் எப்போதும் தனித்துவமான சுவை கொண்டவை, இந்த பாலக்காடு சிக்கன் வறுவலும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த பாலக்காடு சிக்கன் வறுவல் சாதம், சப்பாத்தி, புரோட்டா என அனைத்திற்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு காரசாரமான பாலக்காடு சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக்காடு சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சிக்கன் - 1 கிலோ
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்கத் தேவையானவை:

- சின்ன வெங்காயம் - 15
- வர மிளகாய் - 5
- மல்லித்தூள் - 3 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் சிக்கனை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை எடுத்து, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் சின்ன வெங்காயம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். பின் அவற்றை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

- பின்னர் அதே கடாயில், மசாலாப் பொடியை ஒவ்வொன்றாக சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

- பிறகு அவற்றை அதே மிக்ஸி ஜாரில் போட்டு, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- வாணலியில் இன்னும் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- மூடி வைத்து, சிக்கன் பாதி வேகும் வரை சமைக்கவும்.

- சிக்கன் பாதி வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மீண்டும் மூடி வைத்து, மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.

- அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான பாலக்காடு சிக்கன் ரெடி. இதை உங்களுக்கு பிடித்த உணவோடு வைத்து சாப்பிட்டு பரிமாறுங்கள்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 21, 2026, 16:52 [IST]
Desktop Bottom Promotion