Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
பாலக் கீரையை ஒருடைம் இப்படி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
Palak Dal Recipe In Tamil: உங்கள் வீட்டில் கீரை செய்தாலே, யாரும் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை பாலக் கீரை வாங்கினால், அதைக் கொண்டு தால் செய்யுங்கள். இந்த பாலக் தால் சாதத்துடன் சாப்பிட மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு தால் செய்தால், கீரை விரும்பாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பாலக் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 3/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* பாலக் கீரை - 2 கட்டு
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 1 1/2
கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாலக்கீரையை சுத்தம் செய்து, நீரில் கழுவி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பெருங்காயத்
தூள் மற்றும் வரமிளகாயையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, மிளகாய் தூள் மற்றும் சாம்பார்
தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பாலக் கீரையை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறிவிட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து கிளறி, 2-3
நிமிடம் வேக வைத்து, இறக்கும் முன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான பாலக் தால் தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
