Just In
- 50 min ago
அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- 16 hrs ago
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- 17 hrs ago
ரமலான் நோன்பு இருக்குறவங்க ஆரோக்கியமா இருக்க 'இந்த' விஷயங்கள கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles
சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!
- News
பல்கலை வித்தகராக விளங்கிய விவேக்... இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ - மு.க.ஸ்டாலின்
- Sports
தோனியை கவர்ந்த அந்த தமிழக வீரர்.. போட்டிக்கு பின் விறுவிறுவென அருகில் சென்று.. ப்பா இதுதான் தல!
- Movies
அந்த பளிச் சிரிப்பும், 'கஸ்' என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை.. நடிகை கஸ்தூரி உருக்கம்!
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலக் சிக்கன்
பாலக் சிக்கன் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சிக்கன் ரெசிபிக்களுள் ஒன்று. இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பட்டர் நாண் செய்வதாக இருந்தால், பாலக் சிக்கன் செய்யுங்கள். இது செய்வது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு பாலக் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பாலக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 350 கிராம்
* பாலக் கீரை - 300 கிராம்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* ஏலக்காய் - 2
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 3
* இஞ்சி - 2 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* மிளகாய் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாலக் கீரை, பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் உடனே குக்கரின் விசிலை எடுத்துவிட்டு திறக்க வேண்டும். இதனால் பாலக் கீரை நிறம் மாறாமல் பச்சை பசேலென்று இருக்கும்.
* பாலக் கீரை நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ஓமம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் சிக்கனை சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் சிக்கனை நன்க வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிக்கன் வேகும் அளவு சிறிது நீர் சேர்த்து சிக்கனை வேக வைத்துக் கொள்ளலாம்.
* இறுதியில் அரைத்த பாலக் கீரை மற்றும் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பாலக் சிக்கன் தயார்.
Image Courtesy: archanaskitchen