Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்னாக் வேணுமா? அப்ப இந்த போண்டாவை செஞ்சு சாப்பிடுங்க...!
Palak Bonda Recipe in Tamil: வீட்டில் பாலக்கீரையை வைத்து பல வகையான உணவுகளை செய்திருப்போம். மற்ற கீரைகளை போல் இல்லாமல் இது சுத்தம் செய்ய எளிது என்பதால் பலரும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள ஏற்ற ஒன்றாக இருக்கிறது.

இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம். சரி வாங்க இந்த பாலக்கீரையையோ வைத்து எப்படி போண்டா செய்து என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- பாலக் கீரை - 1 கட்டு
- அரிசி மாவு - ½ கப்
- கடலை மாவு - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- ஓம விதைகள் - 1 டீ ஸ்பூன்
- பெருங்காய தூள் - ½ டீ ஸ்பூன்
- இஞ்சி - சிறு துண்டு (2 இன்ச் அளவு)
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - 3 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கீரையை சுத்தம் செய்து மண் இல்லாதவாறு நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
- பின் கழுவிய கீரையை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து கரும்பூஞ்சை இல்லாதவாறு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சி மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பின் அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கிளறவும்.
- அதில் ஓமம் விதைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை அணைத்து நம் கலந்து வைத்த மாவு கலவையில் சேர்க்கவும்.
- பின் அதை ஒரு கரண்டியின் நுனி பகுதியால் நன்றாக கிளறி விடவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கொஞ்சம் கெட்டியாக போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான எண்ணெயை சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக உருட்டி போண்டா போடுவது போல எண்ணெயில் போட்டு வேக விடவும்.
- இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாக சிவந்து வந்ததும் எடுத்து ஆற விடவும்.
- கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் அருமையான பாலக் கீரை போண்டா ரெடி.



Click it and Unblock the Notifications