Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
கிராமத்து சுவையில் பச்சை சுண்டைக்காய் சாம்பாரை எப்படி செய்யணும் தெரியுமா?
Sundakkai Sambar Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் சுண்டைக்காய் வைத்து சாம்பார் செய்துள்ளீர்களா? என்னது, சுண்டைக்காய் சாம்பாரா என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக சுண்டைக்காய் வைத்து புளிக்குழம்பை தான் செய்வார்கள்.
ஆனால் இந்த சுண்டைக்காயைக் கொண்டு சாம்பார் செய்தால், அதில் உள்ள கசப்புச்சுவையும் தெரியாது, மணமும், சுவையும் அருமையாக இருக்கும். இந்த சுண்டைக்காய் சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு சுண்டைக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சுண்டைக்காய் - 100 கிராம்
பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பாருக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* மாங்காய் - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* சாம்பார் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* சுடுதண்ணீர் - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 2
* புளி தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஊற வைத்த பருப்பை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன் 1 கப்
தண்ணீர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி,
அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சுண்டைக்காயை கீறி விட்டு, எண்ணெயில் போட்டு,
சுண்டைக்காயின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
சுண்டைக்காய் நன்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் மாங்காயை சேர்த்து
3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கிய சுண்டைக்காயை சேர்த்து, நன்கு 5 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் சாம்பார் தூளை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி, பச்சை மிளகாயை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, புளி தண்ணீரை சேர்த்து 5
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
பச்சை சுண்டைக்காய் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications