Latest Updates
-
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது..
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Pachai Payaru Thengaipaal Arisi Kanji Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சத்தான, அதே சமயம் வயிறு நிரம்புமாறான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட வேண்டுமா? முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காய்ச்சல் உள்ளதா? அப்படியானால் பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சியை செய்யுங்கள். இந்த கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக டயட்டில் உள்ளோர் இந்த கஞ்சியை ஒரு கப் குடித்தாலே போதும்.

இந்த பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 2 சிட்டிகை
* வெந்தயம் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* புதினா - சிறிது
* இஞ்சி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை பயறு - 1/2 கப் (ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி - 1 கப் (10 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 2 கப்
* தேங்காய் பால் - 2 கப் + 1/2 கப்
செய்முறை:
* முதலில் பச்சை பயறை வாணலியில் போட்டு வறுத்து எடுத்து, நீரில் 2
முறை கழுவி, சுத்தமான நீரை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், பெருங்காயத் தூள்,
பூண்டு, சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, இஞ்சி,
கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த பச்சை பயறை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4
நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி,
அதோடு 2 கப் தேங்காய் பாலை சேர்த்து கலந்துவிட்டு, குக்கரை மூடி 5-6
விசில் விட்டு, குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை கிளறி விட வேண்டும்.
* பின் மீண்டும் கஞ்சியை அடுப்பில் வைத்து கிளறி, சிறிது கொத்தமல்லி
மற்றும் 1/2 கப் தேங்காய் பாலை ஊற்றி 1 கொதி வந்ததும் அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications
