Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
உடல் சூட்டைக் குறைக்கும் பச்சை பயறு ஜூஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு குடிங்க.. சத்தானதும் கூட..
Pachai Payaru Juice Recipe In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. நிறைய பேர் உடல் சூட்டினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் உடல் சூட்டைக் குறைக்க தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடித்து வருவார்கள். நீங்கள் உங்கள் உடல் சூட்டை வேகமாக குறைக்க விரும்பினால், பச்சை பயறு கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வாருங்கள்.
இந்த பச்சை பயறு ஜூஸ் கோடைக்காலத்தில் குடிக்க ஏற்ற அருமையான ஜூஸ். அதோடு இந்த ஜூஸ் உடலுக்கு சத்தானதும் கூட. அதுவும் கோடை விடுமுறை விட்டு வீட்டில் குழந்தைகள் இருப்பதால், எப்போதும் ஏதாவது சாப்பிட அல்லது குடிக்க கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் இந்த பச்சை பயறு ஜூஸை செய்து கொடுத்தால், அவர்களின் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு, உடலும் வலுவாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு ஜூஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு ஜூஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 3
* ஊற வைத்த பாதாம் - சிறிது
* ஊற வைத்த முந்திரி - சிறிது
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 3 கப் + 2 கப் + 1 கப்
* நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
* ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
* ஊற வைத்த சப்ஜா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் பச்சை பயறை
சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதை நீரில் 2 முறை கழுவி கொள்ள வேண்டும்.
* அதன்பின் மிக்சர் ஜாரில் கழுவிய பச்சை பயறு, 1 கப் துருவிய
தேங்காய், 3 ஏலக்காய், உப்பு சேர்த்து, ஊற வைத்த பாதாம் மற்றும்
முந்திரியை சேர்த்து, முதலில் 1 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி
வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வடிகட்டிய சக்கையை மீண்டும் ஜாரில் போட்டு, அத்துடன் 2 கப்
நீரை ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மீண்டும் அந்த சக்கையை ஜாரில் போட்டு 1 கப் நீரை ஊற்றி
மீண்டும் அரைத்து, அதையும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வடிகட்டிய பாலுடன், நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு
கலந்து விட வேண்டும்.
* பின் அதை ஃப்ரிட்ஜ்ஜில் குறைந்தது 1/2 மணிநேரம் வைக்க வேண்டும்.
* இறுதியாக ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து அதை எடுத்து, அதில் ஊற வைத்த சப்ஜா
விதைகளை சேர்த்து, சிறிது ஐஸ் கட்டிகளையும் சேர்த்து கலந்து
பரிமாறினால், சுவையான பச்சை பயறு ஜூஸ் தயார்.



Click it and Unblock the Notifications