Latest Updates
-
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க
மாலை வேளையில் சாப்பிட ஏற்ற... சத்தான... பால் கொழுக்கட்டை
Paal Kozhukattai: ஆடி வெள்ளிக்கிழமையில் பலர் தங்கள் வீடுகளில் இனிப்புக்களை ஏதாவது செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் அப்படியானால், இந்த ஆடி வெள்ளிக்கிழமையில் கொழுக்கட்டை செய்யுங்கள்.
அதுவும் பால் கொழுக்கட்டையை செய்யுங்கள். வழக்கமாக பால் கொழுக்கட்டையில் வெல்லப்பாகு சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் இன்று பார்க்கப் போகும் பால் கொழுக்கட்டை சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருக்கும்.

முக்கியமாக இந்த பால் கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும், எளிதில் செய்யக்கூடியவாறும் இருக்கும். உங்களுக்கு பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பால் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - 1 கப்
* பால் - 3 கப்
* தண்ணீர் - 1 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* தேங்காய் பால் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் அரிசி மாவை எடுத்து, உப்பு மற்றும் நெய்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பூன் பயன்படுத்தி
கிளறி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைய
வேண்டும்.
* பின்பு கையில் நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு
உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு 8-10 நிமிடம்
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பாலானது சுண்டி, கொழுக்கட்டை வெந்ததும், சர்க்கரையை சேர்த்து கிளறி,
4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி, ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
