Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
ஓட்ஸை வைச்சு இப்படி கட்லெட் செஞ்சு பாருங்க... சுவையாக இருப்பதுடன் எடையும் வேகமாக குறையும்...!
Oats Cutlet Recipe in Tamil: ஓட்ஸ் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது டயட் தான். டயட் ஆரம்பித்ததும் ஓட்ஸ் வாங்கி வைத்து விடுவார்கள். அதை வைத்து கஞ்சி தோசை என பலவற்றை செய்து சாப்பிடுவார்கள். பின் டயட்டை விட்டதும் ஓட்ஸ் வைத்து என்ன செய்யலாம் என யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த ஓட்ஸ் கட்லெட் செய்து பாருங்கள். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் - 1 கப்
- கடலைப் பருப்பு - ¼ கப்
- பச்சை பட்டாணி - ¼ கப்
- உருளைக்கிழங்கு - 2
- பெரிய வெங்காயம் - 1
- கேரட் - 1
- குடமிளகாய் - 1
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - சிறு துண்டு (2 இன்ச் அளவு)
- ஆம்சூர் தூள் (மாங்காய் பொடி) - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயத்தை தோல் உரித்து கரும்பூஞ்சை இல்லாதவாறு கழுவி சுத்தம்
செய்து பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- இஞ்சி மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்து
கொள்ளவும்.
- பின் கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை
நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடலை பருப்பை சுத்தமாக கழுவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற
வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
கொள்ளவும்.
-பின் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு, மற்றும்
பச்சை பட்டாணியை சுமார் 25 நிமிடம் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வேக வைத்த மற்றும் நறுக்கிய
காய்கறிகளை சேர்க்கவும்.
- உருளைக்கிழங்கை நன்றாக மசித்து விட்டு கொள்ளவும்.
- அதனுடன் ஓட்ஸ்ஸை சேர்த்து கிளறி கொள்ளவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சீரகத்தூள்,
கரம் மசாலா, மற்றும் தேவையான உப்பை சேர்த்து நன்றாக பிணைந்து பத்து
நிமிடத்திற்கு ஊற வைத்து கொள்ளவும்.
- கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவி மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி
கட்லெட் வடிவில் அழுத்தி எடுத்து கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் தட்டி வைத்திருக்கும் கட்லெட்களை
சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுத்தால் சுவையான
ஆரோக்கியமான ஓட்ஸ் கட்லெட் ரெடி!



Click it and Unblock the Notifications
