Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
அடுத்தமுறை சப்பாத்திக்கு இந்த ஸ்டைலில் உருளைக்கிழங்கு கறி செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
North Indian Style Potato Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை வடஇந்திய ஸ்டைலில் உருளைக்கிழங்கு கறி செய்யுங்கள். இந்த கறி க்ரீமியாகவும், மிகவும் டேஸ்டியாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி உருளைக்கிழங்கு சைடுடிஷ்ஷை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வடஇந்திய ஸ்டைலில் உருளைக்கிழங்கு கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வடஇந்திய ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தயிர் மசாலாவிற்கு...
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
கறிக்கு....
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (அரைத்தது)
* தண்ணீர் - 1/4 கப் + 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
வதக்குவதற்கு...
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்துக் கொண்டு, அத்துடன்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா,
மிளகுத் தூள், உப்பு, கசூரி மெத்தி சேர்த்து கிளற வேண்டும்.
* மசாலா கலவையானது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி,
கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 3 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து,
அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, தக்காளியில் உள்ள நீர்
வற்றி, எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிர் மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி, 1/4 கப்
நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் வெண்ணெயை
சேர்த்து உருகியதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து 5
நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு அவற்றை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு
கிளறி விட்டு, 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வடஇந்திய ஸ்டைல்
உருளைக்கிழங்கு கறி தயார்.



Click it and Unblock the Notifications











