Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
காரமான... காளான் மசாலா

தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 7 பல்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 டீபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் கிராம்பு போன்றைவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ளதை ஒரு பௌலில் போட்டு, பின்னர் தக்காளியை போட்டு அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அதோடு துருவிய தேங்காய், தக்காளி கெட்சப் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து, கிளறி நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்க்க வேண்டும்.
அடுத்து தண்ணீர் சிறிது ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும். இல்லையெனில் கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு, இறக்கலாம். இதனால் காளானும் நன்கு வெந்துவிடும்.
இப்போது காரமான காளான மசாலா ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications
